பிரான்ஸ் பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு தடை கொண்டுவரப்படுவது தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பெரும்பான்மையான மக்கள் பாடசாலைகளில் அபாயா அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்தவாரம் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்க உள்ள நிலையில், ‘பாடசாலைகளில் அபாயா அணிவதை தடை செய்வதாக கல்வி அமைச்சர் Gabriel Attal கடந்த ஞாயிற்றுக்கிழமை
அறிவித்தார்.
அரசியல் மட்டத்தில் இருந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. இந்நிலையில், பாடசாலைகளில் அபாயா அணிவது தொடர்பாக பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் 82% சதவீதமானவர்கள் பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
17% சதவீதமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏனைய 1% சதவீதத்தினர் கருத்து தெரிவிக்கவில்லை. இணையத்தளமூடாக மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 18 வயது நிரம்பிய 1,008 பேர் பங்கேற்றிருந்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக