பேஸ்புக் வலைத்தளம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில், எந்த விதத்திலும் பேஸ்புக் தடை மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மொழிபெயர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.அந்த அமைப்பின்
தலைவர் ரஜிவ் யசிரு குருவிட்டகே மெத்திவ் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் நேற்றைய தினம் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது.இந்த முடக்கம் காரணமாக மில்லியன் கணக்கிலான சமூக வலைத்தள பயனாளர்கள் தங்கள் பேஸ்புக்
மற்றும் இன்ஸ்ட்ராகிராம் கணக்குகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளில் வாழும் பேஸ்புக் பயனாளர்களே இந்த நிலைமைக்கு அதிகமாக முகம் கொடுத்துள்ளனர்.சில மணி நேரங்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் ஆகிய வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பிய போதிலும், சில பயனாளர்களுக்கு குறைந்த வேகத்தில் இயங்குவதாக
குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு பேஸ்புக் செயலிழந்தமையினால், தங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களினால் பேஸ்புக் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என இலங்கை பயனாளர்கள் சந்தேகம்
வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக இலங்கையில் திட்டமிட்டு பேஸ்புக் முடக்கம் செய்யப்பட்டதாக போலிப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை இலங்கையர்கள் எவரும் நம்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய பேஸ்புக் வேகமாக இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக