அடையாள அட்டை இல்லாமல் சென்றோருக்குயாழில் நேர்ந்த கதி

சனி, 24 நவம்பர், 2018

அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாக பொலிஸார் கைது செய்து செய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்று தலை கீழாக கட்டி த்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.
 பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கையில் ,
கடந்த 19ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது மைத்துனரும் முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று 
கொண்டிருந்த போது , வீட்டுக்கு அருகாமையில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த சுன்னாகம் பொலிஸார் நாம் பயணித்த முச்சக்கர வண்டியை மறித்து சோதனை யிட்டதுடன் , முச்சக்கர வண்டியை ஒட்டி சென்ற எனது மைத்துனரிடம் ஆவணங்களை வாங்கி அவற்றையும்
 பரிசோதித்தனர்.
பின்னர் பின்னால் இருந்த என்னிடம் அடையாள அட்டையை கேட்டனர். அப்போது என்னிடம் அடையாள அட்டை இல்லை. வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன் எனவும், வீட்டில் இருந்து எடுத்து வந்து காண்பிக்கின்றேன் என கேட்டதற்கு , அதனை ஏற்காத பொலிஸார் எம்மை முச்சக்கர வண்டியுடன் சுன்னாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று , மைத்துனை பொலிஸ்யினரின் சமையல் அறையில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்ததுடன் , என்னை தலைகீழாக கட்டி அடித்து சித்திரவதை செய்தனர்.
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தனியா என கேட்டே என்னை தாக்கினார்கள். பின்னர் மறுநாள் 20ஆம் திகதி மாலை எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லாது எம்மை விடுவித்தனர். பலத்த சித்திரவதைகள் , அடிகாயங்களுக்கு உள்ளான நாம் வலி தாங்க முடியாது 20ஆம் திகதியே தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு சென்று 
சிகிச்சை பெற்றோம்.
எம்மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதை தொடர்பில் யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். என தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் 
எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்த பின்னர் குறித்த இளைஞனின் உடலை குளத்தில் வீசினார்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட அப்போதைய
 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஆறு பேருக்கும் சித்திரவதை குற்றச்சாட்டுக்கு பத்தாண்டு சிறை தண்டனை யாழ்.மேல் நீதிமன்றினால் 2017.05.04ஆம் திகதி விதிக்கபட்டு உள்ளதுடன் , கொலை குற்றசாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக