நாட்டில் நிலவும் வறட்சியின் போது கூட மின்சாரம் விநியோகத்தில் எந்த தடங்கலும் ஏற்படாது என்று மின்சாரத்துறை அமைச்சு வெளியிட்ட நிம்மதி தரும் செய்தி.மின்சார மற்றும் எரிசக்தி
மேம்பாட்டு இயக்குநரும், ஊடக செய்தித் தொடர்பாளருமான சுலக்ஷனா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் வெப்ப வானிலை காரணமாக மின்சார விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படும் என்று செய்திகள் வெளியான
நிலையிலேயே, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.நீர்த்தேக்கங்களில் 73 வீதம் நீர் நிறைந்துள்ளது.எனவே அவற்றில் வறண்ட காலங்களிலும் மின்சாரம் தயாரிக்க போதுமானதாக இருக்கும் என்று சுலக்ஷனா ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக