கடனுக்கு ஒதுக்கி வைத்த லொத்தர் சீட்டில் கிடைத்த பேரதிர்ஷ்டம்!! லொத்தர் விற்கும் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல்
தென்னிலங்கையில் இளைஞன் ஒருவரினால் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட லொத்தர் சீட்டிற்கு
கிடைத்த பணப்பரிசு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிட்டிகல தலகஸ்பே பகுதியில் லொத்தர் சீட்டினை விற்பனை செய்த பெண் தொடர்பில் தகவல்
வெளியாகி உள்ளது.
நாளாந்தம் லொத்தர் சீட்டுகள் பலவற்றை ஒதுக்கிக்கொள்ளும் இளைஞன் வழமையை போன்று தனக்கு 5 லொத்தர் சீட்டினை ஒதுக்கி வைக்குமாறு விற்பனை செய்யும் குறித்த பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இறுதியாக ஒதுக்கிய லொத்தர் சீட்டுகளை பெறுவதற்கு அந்த இளைஞன் வருகைத்தராமையினால், ஒதுக்கப்பட்ட லொத்தர் சீட்டிற்கு பரிசு கிடைத்துள்ளதா என குறித்த பெண் சோதனையிட்டுள்ளார்.அவ்வாறு ஒதுக்கப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றிற்கு ஒரு லட்சம்
ரூபாய் பணம் கிடைத்துள்ளது. உடனடியாக குறித்த இளைஞனுக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்திய பெண் தகவலை வெளியிட்டுள்ளார்.அது மாத்திரமின்றி கிடைத்த பணத்தை உடனடியாக அவருக்கு பெற்றுக் கொடுக்கவும் அந்த பெண் நடவடிக்கை எடுத்துள்ளார். பரிசு வென்ற இளைஞன் மிகவும் மகிழ்ச்சியுடன் லொத்தர் சீட்டு விற்பனை செய்யும் பெண்ணுக்கு 5ஆயிரம் ரூபாய் பணத்தை பரிசாக கொடுத்துள்ளார்.”என்னிடம் லொத்தர் சீட்டு பெற்றவர்களுக்கு பரிசு கிடைத்தால் அவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்பது எனது கடமை என லொத்தர் சீட்டு விற்பனையாளரான வஜித மல்லிக்கா என்ற பெண் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக