நாட்டில் எதிர்வரும்,13-03-2021, சனிக்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்
நாயகம் வைத்தியர்
ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வைரஸ் பாதிப்புக்கு பின்னர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என அவர்
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக