நாட்டில் தடுப்பூசி ஏற்றிய எவருக்கும், இதுவரை குருதி உறைவு இல்லை, அச்சப்படத் தேவையில்லை

வியாழன், 18 மார்ச், 2021

இலங்கையில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ள எவருக்கும் இரத்த உறைவுகள் ஏற்படவில்லை என்பதால் எவரும் அச்சப்படத்தேவை யில்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.
அத்துடன், சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபாம் தடுப்பூசிக்கு அனுமதியளிப்பதற்கான தகவல்கள் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், 06 இலட்சம் தடுப்பூசிகள் முதல் கட்டமாக இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது,
தடுப்பூசிகள் ஏற்றப்படுவதால் இரத்த உறைவுகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்படுவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு
 எவ்வித இரத்த உறைவுகளும் விளைவுகளும் எமது நாட்டில் ஏற்படவில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரான மதிப்பீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதில் இரத்த உறைவுகள் ஏற்பட்டுள்ளதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர் பக்க விளைவுகள் வருகின்றனவா? எந்த எந்த தரப்பினருக்கு பக்கவிளைவுகள் வருகின்றன? ஒரே குழுக்களை சேர்ந்தவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றனவா? என்ற அடிப்படையில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக சுகாதார
 ஸ்தாபனமும் இந்த தடுப்பூசி தொடர்பில் தமது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. 
இதில் இரத்த உறைவுகள் ஏற்படுவதாக கூறப்படவில்லை. ஆகவே, தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள எவரும் 
அச்சப்படத்தேவையில்லை.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவரும் செயற்பாட்டை எஸ்.பி.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன், சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபாம் 
தடுப்பூசிகளுக்கு
 அனுமதி அளிப்பதற்கான தகவல்களும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபைக்கு அனுப்பட்டுள்ளன. அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு அறிக்கைககள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்பதுடன், சீன அரசாங்கத்தால் 06 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக