எதிர்காலத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறும் தவறுகளுக்கான தண்ட பணத்தை தம்மிடம் உள்ள கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது
சம்பந்தப்பட்ட இடத்தில் கடமையில் இருக்கும் பொலிஸாரினால் இந்த தண்டப்பணத்தை கடன் அட்டை மூலம் வசூலிப்பதற்கான தரவை பெற்றுக்கொள்வதற்கான முறை அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர
தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.பொலிஸ் தலைமையகத்தில் இது தொடர்பான இணையதள பணக் கொடுக்கல் வாங்கல் முறை உருவாக்கப்பட்டவுள்ளது.
வாகனம் சார்ந்த தவறுகளுக்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். அந்த புள்ளி குறையும் போது சில மாதங்களுக்கு அல்லது பல வருடங்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக