ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வருடம் 50 ஆயிரம் அரசசேவையில்

சனி, 30 நவம்பர், 2019

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக அடுத்த 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்த தெரிவித்துள்ளார்.அத்துடன் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.நேற்றையதினம் ஹோமாகம ஆட்டிக்கல கனிஷ்ட வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட இரு மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில். அமைச்சர் உரையாற்றியபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக