இப்படியானவர்களும் இலங்கையில் இருக்கின்றனர்

திங்கள், 20 ஜூன், 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் 
காத்திருக்கின்றனர்.
இவர்களுக்கு நலன் விரும்பிகள் பலர் அவ்வப்போது உணவு மற்றும் பானங்களை வழங்கி வருவதை காணக் 
கூடியதாக உள்ளது.
அந்தவகையில், கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை நிரப்ப வரிசைகளில் நின்ற மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம சிற்றுண்டி மற்றும் தேனீரை வழங்கியுள்ளார்.
சமூக உணவு பகிர்வு அணியினருடன் இணைந்து எரிபொருள் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு நேற்று (18) மாலை பனிஸ் மற்றும் தேனீர் வழங்கியதாக ரொஷான் மஹாநாம தமது டுவிட்டரில்
 பதிவிட்டுள்ளார்.
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் 
அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், அலுத்கம பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் மூன்று நாட்களாக காத்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு “பலாக்காய்” தானமும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நலன்விரும்பிகளது செயற்பாடு நெட்டிசைன்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக