நாட்டில் மக்களின் நலன்கருதி இலவச பஸ் சேவை அறிமுகம்

செவ்வாய், 28 ஜூன், 2022

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட தூரப் பாடசாலைகளுக்கிடையிலான விசேட பேருந்து போக்குவரத்து சேவைகள் நேற்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இச்சேவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.
கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. நசுகர் கான் (ZDE)தலைமையின் கீழ் இச்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச் சேவைக்கு அல் ஹிக்மத்துள் உம்மா பவுண்டேஷனின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான கஸ்ஸாலி பாத்திஹ் பூரz அனுசரணையினை 
வழங்கவுள்ளார்.
இச் சேவையானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களின் நலன்கருதி (இரு பஸ் சேவைகள்) கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.1ஆவது பஸ் சேவையானது – கிண்ணியாவில் இருந்து நடுவூற்று, ஊடாக வான்எல வரையிலும், 2ஆவது பஸ் சேவை கிண்ணியாவில் இருந்து முள்ளிப்பொத்தானை வரையிலும் 
நடைபெறும்.
மீண்டும் பாடசாலை முடிவுற்ற பின் இறுதியாக பேருந்து நிறுத்தப்பட்ட இடத்தை வந்தடையும்.
குறிஞ்சாக்கேணி கோட்டத்தில் சுமார் ஆறாயிரம்(6000) மாணவர்கள் இதன்மூலம் பயனடைய உள்ளார்கள். அத்தோடு, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயன் அடைவார்கள்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இச் சேவையானது சுமார் ஆறு மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும்
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக