ஒலுவிலில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாத கொள்கைகளை பரப்பிய இருவர் கைது

வியாழன், 8 ஏப்ரல், 2021

நாட்டில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாத கொள்கைகளை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜஹ்ரான் ஹாசிமை பின்பற்றும் இருவரே இவ்வாறு 
பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 2018 இல் இவர்கள் ஒலுவில் பகுதியில் தீவிரவாத கொள்கைகளை பரப்பியுள்ளனர் என காவல் துறை  பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளை தளமாக கொண்டபயங்கரவாத தீவிரவாத அமைப்புகளின் கருத்துக்களை உள்ளடக்கிய காணொளிகளை இவர்கள் பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல் துறை பேச்சாளர் 
தெரிவித்துள்ளார்.
இவர்கள் தங்கள் வகுப்புகளின் போது மாணவர்களை உடற்பயிற்சிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக