வடமாகாண மக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

வெள்ளி, 8 மே, 2020

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்நிலையில், உணவகங்களில்
 பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.தற்போது
 மிகவும் ஆபத்தான கொரோனா தொற்றுநோய் பரவி வருவதனால் உணவகங்களில் உணவு உண்ணும் போது 
பின்வரும் நடைமுறைகளை அவதானமாகக் கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இயலுமானவரை 
உணவினை வாங்கிச் சென்று உண்ணுங்கள்.உணவகத்தின் உள்ளே 
இருவருக்கு இடையில் ஆகக் குறைந்தது 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.உணவு
 கையாளும் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் முகக் கவசம் அணிந்திருப்பதையும் சுத்தமாக இருப்பதையும் உறுதிப்படுத்துங்கள்.உணவு 
கையாளும் நிறுவனத்தில் கடமையாற்றும் வேலையாள்கள், 2 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஓடும் நீரில் சவர்க்காரமிட்டு சரியான முறையில் 20 செக்கன்களாவது கைகளை 
கழுவுவது உறுதி செய்யப்படவேண்டும். உள் நுழையுமிடத்தில் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவுவதற்கான
 வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.சிறிதளவேனும் காய்ச்சல், இருமல், தொண்டை நோ போன்ற கோரோனா 
தொற்றின் குணங்குறிகளுடைய வேலையாள்கள் எவரும் உணவு கையாளும் நிறுவனத்தினுள்ளோ வளவினுள்ளோ
 கடமையில் ஈடுபடலாகாது. பொதுமக்கள் உணவங்கள் தொடர்பான முறைப்பாடுகளைத் தங்களது பகுதிப் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு மேற்கொள்ள முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக