வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பணவீக்கம் 50 வீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.ஜூன் மாதம் நாட்டின் பணவீக்கமானது 54.6 வீதமாக பதிவாகியுள்ளது. மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 30.1 வீதமாக பதிவாகியது.
பணவீக்கம் இவ்வாறு அதிகரித்துள்ளமை, உணவு மற்றும் உணவுகள் அல்லாத பொருட்களின் விலைகள் மாதாந்தம் அதிகரிக்க காரணமாக
அமைந்துள்ளது.
இதனடிப்படையில் உணவு பணவீக்கமானது மே மாதம் 57.4 வீதமாக பதிவாகியதுடன் ஜூன் மாதம் 80.1 வீதமாக அதிகரித்துள்ளது. உணவுகள் அல்லாத பொருட்களின் பணவீக்கமானது மே மாதம் 30.6 வீதமாக பதிவாகியதுடன் ஜூன் மாதம் 42.4 வீதமாக
பதிவாகியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக