கணவன் - மனைவி இடையே சண்டை குழந்தைகளின் மன நலனை எவ்வாறு பாதிக்கிறது

புதன், 27 ஜூலை, 2022

கணவன் - மனைவி இடையே சண்டை இல்லாத வாழ்க்கையே இருக்க முடியாது. என்னதான் ஒற்றுமையான தம்பதியர் என்றாலும், விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகள் போன்றவற்றை தவிர்க்கவே முடியாது. பெற்றோராகிய உங்களுக்கு இது சாதாரணமாக தோன்றலாம். ஆனால், உங்கள் சண்டை மற்றும் நடவடிக்கைகள் காரணமாக உங்கள் குழந்தையின் மன நலன் பாதிக்கப்படலாம்.
குறிப்பாக, கணவன், மனைவி இருவருமே கோபத்தில் ஒருவரை, ஒருவர் மிகுந்த மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொள்வார்கள். அதை பார்க்கும் குழந்தையின் மனதில் எந்த அளவுக்கு பாதிப்புகள் 
ஏற்படக்கூடும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். பெற்றோர் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருந்தால், அதன் விளைவாக குழந்தைகளுக்கு கவலை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இவ்வளவு ஏன்? எதிர்காலத்தில் அவர்கள் யாரிடமும் ஒட்டி, உறவாட 
விரும்ப மாட்டார்கள்.
இத்தகைய சூழலில், பெற்றோர் தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்தும், பிரச்சினைகள் குறித்தும் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதன்
 மூலமாக உங்கள் 
குழந்தைகளின் நலன் பாதிக்கக் கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெற்றோரின் சண்டை ஏன் குழந்தையை பாதிக்கிறது
ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடம் இருந்து
 அறிவுரை, அன்பு, அரவணைப்பு, வழிகாட்டுதல் 
போன்றவற்றை எதிர்பார்ப்பார்கள். ஆகவே, இதுபோன்ற சமயத்தில் பெற்றோருக்கு இடையேயான வாக்குவாதங்களை பார்க்கும் குழந்தைகளின் மனதில் குழப்பம் ஏற்படக் கூடும். வளர்ந்த குழந்தைகள்
 தான் என்றில்லை. 6 மாத குழந்தைகள் கூட பெற்றோரின் சண்டைகளால் பாதிக்கப்படும். இதேபோன்று 19 வயது வரையிலான இளம் 
பருவ பிள்ளைகள் அனைவருமே பெற்றோரின் சண்டையால் பாதிக்கப்படுவர்.
ஏன் நீண்ட கால பாதிப்பை தருகிறது
பெற்றோர் இடையே தீர்க்கப்படாமல் தொடர்ந்து நடைபெறக் கூடிய சண்டை என்பது, உங்கள் குழந்தையை வாழ்க்கை முழுவதும் பாதிக்கும். பெற்றோரைப் போல, அவர்களுக்கும் திருமணம் நடந்த பிறகு, வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த முடியாமல் 
சிரமம் அடைவார்கள். சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோரை பார்த்து, பார்த்து வளரும் குழந்தைகள் இயல்பாகவே மூர்க்கத்தனமாகவும், கோபம் அடைபவர்களாகவும் இருப்பார்கள்.
பெற்றோர் மாற்று ஏற்பாடாக என்ன செய்யலாம்?
சண்டைகளும், வாக்கு வாதங்களும் இயல்பானவை என்றாலும், அதை வெகுவாக குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதையும் மீறி சண்டை நடைபெற்றால், அது குழந்தைகளை பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் விவாதங்களை தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் முன்பாக வேண்டாம்.
அமைதியாக பேசி சமரசம் அடைய முயற்சி செய்யவும். வெறுமனே சத்தம் போட்டுக் கொண்டிருப்பதால் எந்தத் தீர்வும் ஏற்பட்டு விடாது. ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து பேசுங்கள். அதை பார்த்து வளரும் உங்கள் குழந்தையும் எல்லோருக்கு மதிப்பு அளிக்கும் நபராக இருக்கும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக