நாட்டில் ஆகஸ்ட் 30ஆம் திகதி முதல் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை 2 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி
வழங்கியுள்ளது.
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தபடுவதுடன், இரவு ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மதியம் மூன்று மணிக்கு பின்னரே மின்வெட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் நாளை முதல் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை 2 மணிநேரம் 20 நிமிடங்களாக மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக