நாட்டில் அரசாங்கம் பேக்கரி உரிமையாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே, ஒரு இராத்தல் பாண் 50ரூபாவாலும் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறிப்பிடத்தக்க அளவிலும் குறைக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.
நாட்டில் பேக்கரி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை குறைவடைந்தும் பாண் உட்டப ஏனைய உற்பத்தி பொருட்களின் விலை குறைக்கப்படாமல் இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு தேவையான பிரதான மூலப்பொருட்களான மா, சீனி, மாஜரின் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை பாரியளவில் குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் , அதன் நன்மையை பேக்கரி உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுத்தால் பாண் விலையை குறைக்கலாம்.
உற்பத்தி மூலப்பொருட்களின் விலை
அதிகரிப்பு
டொலர் பிரச்சினை காரணமாக சந்தையில் பேக்கரி உற்பத்தி மூலப்பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதுடன் கோதுமை மா மாபியாவும் நாட்டுக்குள் செயற்பட்டு
வருகின்றது.
200ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமான கோதுமை மா, மாபியாக்கள் காரணமாக 280ரூபாவுக்கே பேக்கரி உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொள்ளமுடிகிறது.
அதேபோன்று முட்டை விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. அரசாங்கம் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை அறிவித்தாலும் இதுவரை கட்டுப்பாட்டு விலைக்கு சந்தையில் முட்டை இல்லை எனவும்
அவர் கூறினார்.
இந்த விடயத்தில் அரச மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்குமானால் 190 ரூபா என்ற அதிக விலைக்கு விற்பனையாகும் 400கிராம் கொண்ட ஒரு இராத்தல் பாணின் விலையை 50ரூபாவாலும் 100ரூபாவுக்கு விற்பனையாகும் பனிஸ் 25ரூபாவாலும் அதேபோன்று ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறிப்பிடத்தக்களவிலும்
குறைக்க முடியும்.
அரசாங்கம் இதில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தராவிட்டால், பிஸ்கட் சாப்பிட வேண்டாம் என நாட்டுக்குள் மக்கள் அபிப்பிராய கருத்து கொண்டு செல்லப்படுவதுபோல், பேக்கரி உற்பத்திகளை கொள்வனவு செய்யவேண்டாம் என நாட்டுக்குள் மக்கள் கருத்து எழுவதற்கு இடமிருக்கின்றதாகவும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக