எரிபொருள் விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, அதிகமான கையிருப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களில் அதிக கையிருப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 4000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3000 மெட்ரிக் தொன் பெட்ரோலை விநியோகம் செய்கிறது.
பேருந்துகள் மற்றும் பாடசாலை சேவைகளுக்கான தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
மேலும் 35,000 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோல் இன்று இரவு கப்பலில் இருந்து இறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான கருத்துக்களை அமைச்சர் வெளியிட்டுள்ள போதிலும் நாடு முழுவதிலும் இன்று டீசலுக்கு நீண்ட வரிசை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக