களமுறிப்பு வனப்பகுதியில் யானையை வேட்டையாடிய இருவர் கைது

திங்கள், 1 பிப்ரவரி, 2021

முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் கொன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 அடி உயரமுடைய 20 வயதான குறித்த
 யானை களமுறிப்பு பகுதியில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டு அதன் தந்தங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 32 வயதானவர்கள் என்பதுடன் முள்ளியவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் 
கொண்டவர்களாவர்.
இச்சந்தேக நபர்கள் யானையின் தந்தங்களை விற்க முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் கோடரியை தம்வசம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக