இலங்கையின் வடக்கே பெரும் தீவுகளாக விளங்கும் காரைநகரும் வேலணைத்தீவும் கடற்பாலம் மூலம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி காரைநகர் மற்றும் வேலணைத்தீவில் உள்ள ஊர்காவற்துறை ஆகியவற்றுக்கான போக்குவரத்தை சரிசெய்யும் நோக்கில் கடற்பாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன் இந்த பாலத்திற்கான
மதீப்பீட்டுப் பணிகள் தற்சமயம் நிறைவடைந்துள்ளதாக
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்
அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.இதற்கான நிதி வந்தவுடன் வேலைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும்
அவர் கூறுகின்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் காரைநகர் – ஊர்காவற்துறை பிரதேசங்களுக்கான பாலம் அமைக்கும் திட்டத்தின் மதீப்பீட்டு பணிகள் நிறைவடைந்து விட்டன.
நிதி வந்தால் பணிகள் ஆரம்பமாகும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர்
தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக ஒருங்கிணைப்புகுழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
என்றார் அவர்.இதேவேளை காரை நகர்மூலம் தீவுப் பகுதிகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்து சீர்செய்யப்படும் செய்தி வலிகாமம் பிரதேச மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக