முல்லைத்தீவில் தையல் இயந்திரங்கள் வழங்கி தொழில் முயற்சிகளை ஊக்கிவிப்பு

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

முல்லைத்தீவு மாவட்டச் செயலக கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட தையல் துறைசார் பயிற்சி நெறிகளின் அடிப்படையில் அவர்களது வாழ்வாதாரத்தை 
விருத்தி செய்து தொழில் முயற்சிகளை ஊக்கப்படுத்தும் முகமாக இன்று (05) தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த தையல் இயந்திரங்களை மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வழங்கி வைத்துப் பின் கருத்துத் 
தெரிவிக்கையில்,
இத் தையல் இயந்திரங்களை வெறுமனே வீட்டுத் தேவைகளுக்குரிய மூலப் பொருட்களாக வைத்திராது வினைத்திறனாகத் தொழில் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அதனூடாக அடுத்தவர்களுக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்கிப்  புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க வேண்டும் எனவும் 
கேட்டுக் கொண்டார்.
இதேவேளை,கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட ஆறு தொழில் முனைவோருக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக