.யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்ட தூர இடங்களுக்கான புதிய பேருந்து நிலையத்தில் தமிழ் மொழியினாலான பெயர்ப் பலகைகள் மாற்றப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நகர அபிவிருத்தித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின்கீழ் அமைக்கப்பட்டுவந்த குறித்த பேருந்து நிலையம் தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்கான
ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.13ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பிரதேசத்தில் பெரும்பான்மையாக
உள்ள மக்களின் மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்ற நிலையினையும் மீறி, நகர அபிவிருத்தித் திணைக்களத்தால் சிங்களத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.இந்த
விடயம் சர்ச்சைகளினை ஏற்படுத்தியிருந்த நிலையில், பேருந்து நிலையம் மாநகரசபையின் கட்டுப்பாட்டின்கீழ் வந்ததன்
பிற்பாடு, மாற்றியமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையிலேயே, இவற்றுக்கான பெயர்மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.எவ்வாறாயினும், பேருந்து நிலையத்தின் முதன்மைப் பெயரிலும், தமிழை
முன்னுக்கு கொண்டுவர மாநகர சபை நடவடிக்கை எடுக்குமா என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக