யாழ் அளவெட்டி, பள்ளிக்குடா இளைஞர்களுக்குக் கொரோனா தொற்று

செவ்வாய், 5 ஜனவரி, 2021

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் வெளிநாடு செல்வதற்காகக் கொழும்பு சென்றிருந்த நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த ஒன்பது பேரும், பளை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவருமாக 11 பேர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் தங்கியிருந்துள்ளனர். அவர்களுக்கு அங்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பி.சி.ஆர். முடிவுகள் கிடைக்கும் முன்னதாக இவர்கள் வான் ஒன்றில் கொழும்பில் இருந்து 04-01-21.அன்று இரவு தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
அவர்களில் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும், பள்ளிக்குடாவைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வந்த தகவலுக்கமைய சுகாதாரப் பிரிவினர் அவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு 
மாற்றியுள்ளனர்.
அவர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் வாகனத்தில் பயணித்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக