நாட்டில் மீண்டும் உச்சத்திற்கு சென்ற தேங்காயின் விலை.!!!

வியாழன், 31 டிசம்பர், 2020


  இலங்கையில் மீண்டும் உச்சத்திற்கு  தேங்காயின் விலை பெரும் குழப்பத்தில் பொதுமக்கள்.!சந்தையில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன்படி
 தேங்காய் ஒன்று சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.அங்காடிகளில் தேங்காய் விலை அதிகரித்தமையை அடுத்து, தேங்காய் ஒன்றின் சுற்றளவிற்கு அமைய
 விலையினை நிர்ணயித்து அரசாங்கம் விசேட வர்த்தமானியையும் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிட்டிருந்தது.இதற்கமைய 13 அங்குல சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை 
விலை 70 ரூபாவாகவும், 12 முதல் 13 அங்குள சுற்றளவுடைய தேங்காய் ஒன்றின் அதி கூடிய சில்லறை விலை 65 ரூபாவாகவும், 12 அங்குலத்திற்கு குறைவான சுற்றளவினை கொண்ட தேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 60 ரூபாவாகவும் நிர்ணயித்து, 
வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.எனினும், தற்பொழுதும் தேங்காய் விலை அதிகமாகவே காணப்படுகின்றது என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக