ஓர் மகிழ்ச்சியான செய்தி மார்ச் 11 முதல் வெள்ளவத்தை வரை படகுச் சேவை

வியாழன், 27 பிப்ரவரி, 2020

மார்ச் 11 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை பயணிகள் படகுச் சேவை ஆரம்பமாகவுள்ளது.வாகன நெரிசலை கருத்திற்கொண்டு இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.பத்தரமுல்ல தியத்த உயன பூங்கா அருகில் ஆரம்பமாகும் இந்த படகுச் சேவை நாவல பல்கலைக்கழகம் அருகே தரித்து பின்னர் வெள்ளவத்தை நோக்கி செல்லும் எனவும் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை சுமார் 20 நிமிடங்களில் இந்த படகுச் சேவையில் செல்ல முடியுமென கூறப்படுகின்ற நிலையில்இ வீதிகளில் பொதுமக்கள் இதே பயணத்திற்கு ஒன்றரை மணி நேரம் வரை செலவிடுவது இதன்மூலம் தவிர்க்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சேவையை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இலங்கை கடற்படையுடன் ஒத்துழைப்புடன் நடத்தவுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக