தேங்காய்க்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது

சனி, 29 ஜூலை, 2023

இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 
தேங்காய் உற்பத்தி 30 சதவீதம் குறையும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தென்னை பயிர் செய்கைக்கு தேவையான உரங்கள் உரிய முறையில் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட  தென்னை ஆராய்ச்சி நிறுவன செய்தி தொடர்பாளர் ​​உரம் இல்லாததால் தென்னை மரங்களின் வளர்ச்சி குறைந்துள்ளதாகவும், இனி உரமிடப்பட்டாலும், சரியாக அறுவடையை  பெற்றுக்கொள்ள குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  2019 ஆம் ஆண்டு தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்களின்படி,  தேங்காயின் வருடாந்த தேவை 4.9 பில்லியன்கள் எனவும், ஆனால் தற்போது 3.1 பில்லியன் தேங்காய்களே அறுவடை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக