நாட்டில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை நிறுத்தம்

புதன், 19 ஜூலை, 2023

களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சைக்கு தேவையான தடுப்பூசி (Heavy Marcaine) கிடைக்காத காரணத்தினால் சிசேரியன் அறுவை சிகிச்சைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக 
வைத்தியசாலை பணிப்பாளர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 குறித்த வைத்தியசாலையில் கடந்த 11ம் திகதி இடம்பெற்ற விசேட வைத்தியர்கள் கூட்டத்தில் மருத்துவமனையில் அந்த தடுப்பூசிகளின் 17 டோஸ்கள் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
மருத்துவமனையின் தேவைக்கு இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவு கையிருப்பு உள்ளது.
 இதனால், உரிய தடுப்பூசிகள் கிடைக்காததால், சிசேரியன் அறுவை சிகிச்சையை நிறுத்துவதுடன், சிசேரியன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தாய்மார்களை, வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.என்பதும் குறிப்பிடத்தக்கது  


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக