இலங்கையில் கட்டுப்பாட்டு விலைக்கு கட்டுப்படாத முட்டை

செவ்வாய், 7 மார்ச், 2023

நாட்டில் கட்டுப்பாட்டு விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படாததால் அதிக விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை முட்டை ஒன்று 44 ரூபாவுக்கும், சிவப்பு முட்டை 46 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட 
நிலையில், முட்டை விற்பனையாளர்கள் 54 ரூபா முதல் 65 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்து 
வருகின்றனர்.
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதால் நாட்டு மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக