இலங்கையில் வேகமாக சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை

வியாழன், 9 மார்ச், 2023

தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 184,000 ரூபாவாகவும், 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 170,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தன.
இந்த ஆண்டின் அதிகபட்ச தங்க விலை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பதிவாகி இருந்தது.
24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 193,000 ரூபாவாகும், 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 178,500 ரூபாவாகும் பதிவாகி இருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக