கிளிநொச்சி நபர் விடாது முயற்சித்து ஒரு தொழிற்சாலைக்கு முதலாளியான கதை

புதன், 29 மார்ச், 2023

தனக்குப் பொருத்தமான வேலை ஒன்று கிடைக்காதா? என ஏங்கித் திரிந்த ஒருவர், இன்று தொழிற்சாலை ஒன்றுக்கு முதலாளி ஆகி, 10 பேருக்கு வேலை கொடுத்துள்ளார் என்றால், அவரின் முயற்சியை பாராட்டி வாழ்த்த 
நீங்கள் தயார்தானே..? 
இவரின் பெயர் மதன். உதயநகர் மேற்கு, கிளிநொச்சியில் வசிக்கிறார். அரபு நாடொன்றில் பத்து ஆண்டுகள் வேலைபார்த்துவிட்டுத் தாயகம் திரும்பியவருக்கு, இங்கு எந்தவேலையும் கிடைக்கவில்லை. ஆனாலும் விடாதுவேலை தேடிக்கொண்டிருந்தார். 
ஒருநாள் நண்பர் ஒருவரின் வீட்டில், அங்கிருந்த சொகுசு இருக்கையில் ( Sofa ) அமர்ந்தவாறே பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது ‘சோபாவில் அமர்ந்திருக்கிறோமே, அதையே உற்பத்திசெய்து சந்தைப்படுத்தினால் என்ன?’ என்ற எண்ணம் நொடிப்பொழுதில்
 வந்து செல்கிறது. 
எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் மதன். விளைவு..? தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். உற்பத்தியைத் தொடங்கினார். 
ன்று அவரது தொழிற்சாலையில் 10 பேர் வரையில் பணிபுரிகிறார்கள். இவரது வியாபாரம் வேகமாக வளர்ந்ததற்குக் காரணம் 
குறைவான
 விலையிலும் இலகுவான தவணைக் கட்டண அடிப்படையிலும் சொகுசு இருக்கைகளை வழங்கிவருவதுதான். 
தொடக்கத்தில் ஒன்றிரெண்டு இருக்கைகளைச் செய்ய ஆரம்பித்தவர்,29-03-2022. இன்று விதம்விதமாக, அதிக எண்ணிக்கையில் செய்து வியாபாரத்தில் உயர்ந்திருக்கிறார். KMT Sofa என்பது இவரது நிறுவனத்தின் பெயர். 
இந்த உலகம் வாய்ப்புகளால் ஆனது. ஆனால் 
அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதிலேயே எமது வெற்றி தங்கியுள்ளது. 
முயற்சி செய்து, வெற்றி கண்டிருக்கும் மதன் 
அவர்களுக்குஎமது இணையல்களின்  
வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக