நீங்கள் கணனி, போன் பாவிப்பதனால் உண்டாகும் உடற் சூட்டை தணித்து பாதுகாக்க வேண்டியவை

புதன், 15 மார்ச், 2023

நாம் இப்போது நேரம் கிடைக்கும் நேரம் எல்லாம் ஸ்மார்ட் போன் பாவிப்பது வழக்கம். அது ஒரு புறம் இருக்க, எங்கும் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளமையால் கணனிப்பாவனையின்றி வேலை செய்வோர் இல்லை என்றே கூறலாம்.
இப்படி நாம் இருப்பதனால் உடலில் உஷ்ணங்கள் ஏற்படுகிறது. இன்று  உடல் சூட்டின் விளைவாக உடலுக்கு ஏற்படுத்தப்படும் விளைவுகளையே நாம் பார்க்கப் போகிறோம்.
:உடல் சூடு காரணமாக
உடலில் அதிகமாக சூடு ஏற்படும் பொழுது பித்தப்பையில் பாதிப்புகள் ஏற்பட்டு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. 
உடலில்  சூடு அதிகரிக்கும் பொழுது கண்களில் எரிச்சல், வாய்ப்புண், தூக்கமின்மை, வயிற்று வலி, குமட்டல் இது போன்ற சாதாரண அறிகுறிகள் ஏற்படும். இது போன்ற பாதிப்புகள் ஏற்படும் பொழுதே சரி 
செய்துகொள்வது நல்லது.
மேலும் உடல் சூடு இன்னும் அதிகமாக அதிகரிக்கும் பொழுது மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், சிறுநீரக தாரை எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் 
போன்றவை ஏற்படும்.
பெண்களில் மாதவிலக்கு நாட்களில் உடல் சூடு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது, இல்லையன்றால் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகள்:
உடலில் சூட்டை அதிகரிக்கும் புளிப்பு, உப்பு, காரம் போன்றவற்றை அதிக அளவு சாப்பிடும் பொழுது உடலில் அதிக அளவு உஷ்ணங்களும் 
ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி டீ, காபி, கருவாடு, புளித்த மோர்,வினிகர், ஊறுகாய் போன்றவற்றை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் 
சூடு ஏற்படுகிறது.
மது பழக்கம், புகை பழக்கம் போன்றவற்றாலும் உடலில் அதிக சூடுகள் ஏற்படுகிறது.
உடல் சூட்டை குறைக்க 
நம் உடலில் அதிகமாக சூடு ஏற்படும் பொழுது நீர் சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளான புடலங்காய், வெள்ளரிக்காய், வெண்பூசணி, முள்ளங்கி போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி இளநீர் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
கீரை வகைகளான மணத்தக்காளி கீரை, பொன்னாக்கண்ணி கீரை போன்றவை  உணவில் எடுத்துக்கொள்ளும் பொழுது உடலில் உள்ள உஷ்ணகளை கட்டுப்படுத்த உதவிக்கிறது.
உடல் சூட்டை தணிக்க சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, நார்த்தம்பழம் போன்றவை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
உடல் முழுவது ஏற்படக்கூடிய சூட்டை தணிப்பதற்கு வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
எனவே, இவற்றை நாம் நமது வேலைகளுடன் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் தோன்றும் உஷ்ணத்தை குறைத்து 
ஆரோக்கியமாக வாழலாம்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக