யாழ் மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அடிக்கடி வீதிகளில் கொட்டிக் காணப்படும் மணல் மண்

ஞாயிறு, 12 மார்ச், 2023

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் கடந்த சில நாட்களாக குடத்தனை சந்திக்கும் வல்லிபுரம் மாவடி சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் மணல் மண் இரவு வேளைகளில்  
வீதியில் கொட்டப்பட்டு காணப்படுவதால் விபத்துக்கள்
 ஏற்பட்டுள்ளதுடன் இரவு நேர பயணிகள் பல அசௌகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
கடந்த பத்து நாட்களுக்குள் இவாவாறு மூன்று தடவைகள் இடம் பெற்றுள்ளது.
இதில் ஒருநாள் மட்டும் யாழ்ப்பாணம் வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதியில் கொட்டப்பட்டு காணப்பட்ட மணல் மண்ணை சேகரித்து   
தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றதை அவதானிக்க முடந்தது. மிகுதி நாட்களில் வீதியில்  மணல் கொட்டப்பட்ட மறுநாள் இரவே காணாமல்
 போகின்றன.
இதேவேளை இது தொடர்பாக பொலீசாரை வினாவியபோது அவர்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியாது  என 
குறிப்பிடுகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக