பூரணை நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார்.அந்த நாளில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறும்
குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.மேலும் பூரணை நாட்களில் வெளிநாட்டவர்கள் மதுபானம் வாங்குவதற்கு வழியில்லை என்று அவர் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மதுபானசாலைகளை 24 மணி நேரமும்
திறக்க வேண்டும் என்று முன்னர் அவர் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக