நாட்டில் எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டில் கடும் மின்வெட்டு

திங்கள், 27 டிசம்பர், 2021

இலங்கை எதிர்வரும் ஜனவரி மாதம் திட்டமிட்ட மின்வெட்டுக்களை எதிர்கொள்ளவுள்ளது என்றும், இது தொடர்பில் இலங்கை மின்சார சபை, அரசுக்கு எச்சரித்துள்ளது என்றும், தெரியவருகின்றது.அனல் மின் உற்பத்திக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், மின் துண்டிப்பை தவிர்க்க முடியாது என்று மின்சார சபை 
சுட்டிக்காட்டியுள்ளது.
அனல் மின் நிலையத்துக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை மின்சார சபை கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. டொலர் கையிருப்பு இல்லாமையால் தேவைப்படும் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாது உள்ளது.
தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் எதிர்பார்க்கபட்டுள்ள எரிபொருள் ஆகியவை எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதி வரை மட்டுமே போதுமானது என்ற நிலையில், எரிபொருள் இறக்குமதியே தற்போதுள்ள வழி என்று தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் இருப்புக்களைப் பேணுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ஜனவரி மாதம் முதல் இலங்கை கடுமையாக மின் துண்டிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தி சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியொன்றில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக