நாட்டில் புதிய விலைக்கு உடன்படவில்லை: முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

வியாழன், 15 டிசம்பர், 2022

நுகர்வோர் சேவை அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள முட்டைக்கான புதிய திருத்தியமைக்கப்பட்ட விலையில் உடன்பட முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
பிரசாந்த டி சில்வா மற்றும் கேமா ஸ்வர்ணதிபி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அது
 இடம்பெற்றுள்ளது.
அப்போது, ​​நேற்று கூடிய வாடிக்கையாளர் சேவை கவுன்சில் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 42 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் நிர்ணயம் செய்ய தீர்மானித்ததாக வாடிக்கையாளர் சேவை அதிகார சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அப்போது, ​​முட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா, இந்த விலைகளுக்கு தமது வாடிக்கையாளர்கள் உடன்படவில்லை என நீதிமன்றில்
 அறிவித்தார்.
வர்த்தமானி அறிவிப்பில் தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலைகளை விட புதிய விலைகள் குறைந்துள்ளதாகவும் அதனை திருப்திப்படுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, இந்த மனுவை 
விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடுமாறு
 கோரினார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கை பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
அத்துடன், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை விசாரணை முடியும் வரை இடைநிறுத்தி நீதிமன்றம் இடைக்கால உத்தரவு 
பிறப்பித்தது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக