நாம் கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா

வெள்ளி, 29 மார்ச், 2024

 இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் கிரீன் டீ குடிப்பதை பழக்கமாக்கி வைத்துள்ளனர். இந்த டீயை குடிப்பதால் உடல் 
ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஒரு பக்கமாக இருக்க 
இதனால் பக்க விளைவுகளும் வருகின்றது. 
உலகளாவிய ரீதியில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த டீ உடல் எடையை கட்டப்படுத்த நினைப்பவர்கள் தான் அதிகமாக குடிக்கின்றனர்.
கிரீன் டீ குடித்தால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறுவயிற்றில் கிரின் டீ குடிப்பதால் அது வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தகூடும். இதனால் நெஞ்செரிச்சல், அமிலச்சுரப்பு, செரிமானப்பிரச்சனை போன்றவை வரலாம்.
எனவே கிரின் டீ அருந்தவதற்கு முன்னர் கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு கிரின் டீ குடித்தால் ஆரோக்கியம் மேம்படும். அதிகமாக கிரீன் டி குடித்தால் அது எமக்கு தலைவலியை ஏற்படுத்துவதோடு தலைசுற்றும் 
ஏற்படுத்தலாம்.
இதில் காணப்படும் ஒரு வகை ரசாயனம் எமது உறக்கத்தை இல்லாமல் செய்யும். கிரீன் டீ குடிக்க குடிக்க எமது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைந்து கொண்டே செல்லும்.
இது புரதத்தின் அளவை குறைத்து எமக்கு ரத்த போக்கை ஏற்படுத்தும். இதிலுள்ள காபின் கல்லீரலுக்கு கூடிய அழுத்தத்தை 
கொடுக்கும்.
இதை அதிகமாக குடிப்பவர்கள் ஒரு வகை எலும்பு நோயால் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம்.
கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த டீ குடித்தால் கருச்சிதைவு ஏற்படலாம். குழந்தையின் வளர்சிதை பாதிக்கப்படலாம்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக