நாட்டில் மேல் மாகாண பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான அறிவிப்பு

செவ்வாய், 5 மார்ச், 2024

நாட்டில் மேல்மாகாண பாடசாலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் இறுதிப் பரீட்சைகள்.06-03-2024 நாளைமீண்டும் நடைபெறவுள்ளதாக மேல்மாகாண கல்வி திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
தேர்வுக்கு முன்னதாக அறிவியல், வரலாறு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தற்காலிகமாக 
நிறுத்தப்பட்டன. 
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  
எவ்வாறாயினும், புதிய வினாத்தாள்களை தயாரித்த பின்னர், உரிய தரப் பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் நடைபெறும் என மேல்மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  
இதேவேளை, பரீட்சை வினாக்கள் வெளியேறியமை தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தின் வளாகத் தலைவர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா கருத்து வெளியிட்டார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக