மனித உடலால் உணரப்படும் வெப்பம், நாளை (20.03) நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் அவதானத்திற்கு உரிய மட்டத்தில்
இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை,
இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில்
எச்சரிக்கை நிலையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கையில் மிதமிஞ்சிய வெப்பநிலை நிலவி வருகிறது. குறிப்பாக இந்த வெப்பநிலையானது வடக்கு, கிழக்கு, மற்றும் மேல் மாகாணங்களை அதிகளவில் பாதித்துள்ளது.
இந்நிலையில் இந்த காலப்பகுதியில் இடம்பெறும் இல்ல விளையாட்டு போட்டிகளை இடைநிறுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பும்போது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி
வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், அதிகளவிலான தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெளியில் செல்பவர்கள் சன்ஸ்கிரீன் போன்ற க்ரீம்களை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுகிறது. மேலும் தண்ணீர் அதிகளவில் உள்ள உணவு, பானங்களை எடுத்துக்கொள்ளுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக