யாழில் கனடா அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது

வெள்ளி, 22 மார்ச், 2024


கனடாவிற்கு அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களாக இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால், இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் 
முறைப்பாடு செய்தார்.
 முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றில்
 முற்படுத்தினர்.
நீதிமன்றில் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்ச ரூபாய் பணத்தினை இளைஞனிடம் குறித்த பெண் மீள் அளித்தார். அதனை 
அடுத்து பெண்ணை 06 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்தது..என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக