வெளிநாட்டில் செய்து வந்த மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் பதவியை உதறிவிட்டு பாரம்பரிய விவசாயத்துக்கு
திரும்பிய இயற்கை விவசாயி, தனக்கு கொய்யாவில் மட்டும் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபா லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.விருதுநகர் அருகே மல்லாங்கிணறு
கிராமத்தில் வசித்து வரும் ஆதிமூலம், சிங்கப்பூரில் செய்து வந்த மருத்துவர் தொழில்நுட்பவியலாளர் பணியை
விட்டுவிட்டு விவசாய தொழிலை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறார். இவர் தேவையான
விவசாய இயந்திரங்கள் அனைத்தையும் தன்னுடைய சொந்த முதலீட்டில் இருந்து வாங்கி வந்து, சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பிரதான விவசாயமாக கொய்யாப்பழம் பயிரிட்டு வளர்த்து
வருகிறார்.வெறும் இரண்டு ஏக்கரில் இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் வருடத்திற்கு மூன்று லட்ச ரூபாய் வரை வருமானம் பெற்று வருவதாக மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.
மேலும் கூடுதல் விவசாய பயிர்களாக தற்போது மாமரம், நெல்லிக்காய், பப்பாளி ஆகியவற்றையும் வளர்த்து வருவதாக
அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக