நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு விலை விபரம்

புதன், 1 பிப்ரவரி, 2023

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம்
 தெரிவித்துள்ளது. 
நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நான்கின் விலை இவ்வாறு குறைக்கப்படடுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.  
இதன்படி,  ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 25 ரூபா 
குறைக்கப்பட்டு, 1675 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபா குறைக்கப்பட்டு 165 ரூபாவாகவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு சிவப்பரிசி 10 ரூபா குறைக்கப்பட்டு 169 ரூபாவாகவும், கோதுமை மா 5 ரூபா குறைக்கப்பட்டு 230 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படும் என சதொச நிறுவனம் 
தெரிவித்துள்ளது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக