இவ்வருடம் இதுவரை நாடளாவிய ரீதியில் 3500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இது தவிர மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, இந்த 12 மாவட்டங்களையும் டெங்கு அபாயம் உள்ள மாவட்டங்களாக சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.2023 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின்
எண்ணிக்கை 3637 ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக