நாட்டில் வீதியின் குறுக்கே புகையிரத தண்டவாளங்கள் காணப்படின் வாகன சாரதிகள் தெரிந்து கொள்ளவேண்டியவை

வியாழன், 9 பிப்ரவரி, 2023

தூரத்தில் ரயில் வரும்போது ரயில்பாதையை கடக்கும் வாகனங்களின் இன்ஜின்கள் திடீரென ரயில்பாதையின் நடுவில் நின்று, இன்ஜினை ஸ்டார்ட் செய்ய முடியாமல் ரயிலில் சிக்கிக் கொள்ளும் விபத்துக்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அல்லது ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் உண்மையில் ஏன் அப்படி நடக்கிறது??வாருங்கள் இப்போது அதை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
இதுபோன்ற விபத்து நடக்கும் இடத்தில் இருந்த பலர், இன்ஜினில் இருந்து வெளிவரும் காந்தப்புலத்தால்,(magnetic field) வாகனங்களின் இன்ஜின்கள் செயலிழந்ததாக கருதுகின்றனர்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??.ஆனால், இதைப் பற்றி பேசுவதற்கு முன், ஒரு ரயில் என்ஜின் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
ரயிலின் எஞ்சின் ஒரு நடமாடும் மின் உற்பத்தி நிலையம் போன்றது. ஏனென்றால் அதற்குள் ஒரு இன்ஜினைத் தாண்டி இன்னும் பல அம்சங்கள் உள்ளன.சாதாரண இன்ஜின் மற்றும் கியர் சிஸ்டம் ரயிலுக்கு இல்லை. அதிக rpm இல் இன்ஜின் கூட சில வேளை வெடிக்கலாம்.எனவே ரயில் சக்கரங்கள் எலெக்ட்ரிக் மூலமாகவே திருப்ப வேண்டும். அதாவது
 மோட்டர்கள் மூலம்.
ரயிலின் locomotive அல்லது பொதுவான மொழியில், இன்ஜின் பெட்டிக்குள் ஒரு பெரிய உள் எரிப்பு இயந்திரம் உள்ளது.இது டீசலில் வேலை செய்கிறது.1 கிமீ செல்ல சுமார் 5 லிட்டர் டீசல் தேவை.அந்த எஞ்சினுடன் ஒரு பெரிய ஜெனரேட்டர் இணைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டரால் உற்பத்தி செய்யப்படும் AC மின்சாரம் அடுத்ததாக ஒரு மின்மாற்றிக்கு 
செல்கிறது. மின்மாற்றி தேவையான மின்னழுத்தத்தை உருவாக்கியதும், அது rectifiers க்கு செல்கிறது. அங்குதான் இந்த AC மின்சாரம் DC மின்சாரமாக மாற்றப்படுகிறது.
அடுத்து இந்த DC மின்சாரம் இன்வெர்ட்டர் மூலம் மீண்டும் AC யாக மாற்றி ரயில் சக்கரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் டிராக்ஷன் மோட்டார்ஸ்(Traction Motors) எனப்படும் மோட்டார்களுக்கு கொடுக்கப்படுகிறது… அந்த மோட்டார்களில் இருந்துதான் ரயிலின் சக்கரங்கள் சுழன்று ரயில் 
முன்னோக்கி நகர்கிறது.. . இந்த உள் பாகங்கள் ஒரு பெரிய ரேடியேட்டர் சிஸ்டம் மூலம் குளிர்விக்கப்படுகிறது. எனவே, டீசல் ரயில் என்று நினைத்தாலும், உண்மையில் பார்த்தால், இது ஒரு வகையான 
மின்சார ரயில் தான்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக