கனடாவில் ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியான மாணவி.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

கனடாவில் லொட்டரி சீட்டு வாங்கிய முதல் முறையிலேயே ரூ.290 கோடி பரிசை வென்று ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி ஆனார் 18 வயது மாணவி.ஜூலியட் லாமோர் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த மாணவிக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
கனடாவின் ஒன்ராறியோவில் வசிக்கும் அந்த மாணவி, தனது பிறந்தநாளுக்கு தனித்துவமான ஒன்றைப் பெறுவதற்காக ஷொப்பிங் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட யோசனைக்கு 
பிறகும், அவரது தாத்தாவின் அறிவுரையின் பேரிலும், 
அவர் ஒரு லொட்டரி சீட்டை வாங்க முடிவு செய்தார். அது தன் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று அப்போது அவருக்குத் 
தெரியவில்லை
ஜூலியட், அந்த லொட்டரி டிக்கெட் வாங்கியது குறித்து மறந்தே போயுள்ளார். கடந்த ஜனவரி 7ஆம் திகதி லொட்டரியில் தனது அயல் வீட்டுக்காரர் பரிசு வென்றதை அறிந்ததும், தானும் ஒரு டிக்கெட்டை
 வாங்கியிருப்பது அப்போதுதான் அவருக்கு நியாபகம் வந்தது. அந்தப் பெண் தனக்கு ஏதேனும் பரிசு கிடைத்துள்ளதா என்று 
பார்ப்பதற்காக அந்த லொட்டரியின் செயலியை திறந்தாள். லொட்டரியில் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.290 கோடி கிடைத்துள்ளது.
ரூ. 290 கோடி சம்பாதித்தது, அவருக்கே ஆச்சரியத்தை 
ஏற்படுத்தியுள்ளது. மாணவி திகைத்துப் போனார். ஜூலியட் தனது குடும்பத்தாரிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட பிறகு, 
தலா ரூ.2 கோடி மதிப்பிலான ஐந்து மெர்சிடிஸ் கார்களை
 உடனடியாக விலைக்கு வாங்கினார். கூடுதலாக, அவர் ஒரு தனியார் ஜெட் விமானத்தை ரூ. 100 கோடிக்கும், லண்டன் வில்லாவுக்கு ரூ. 40 கோடியும் செலவிட்டுள்ளார்.
மேலும், புத்திசாலித்தனமான பெண் தனது எதிர்காலத்திற்காக சுமார் 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். மருத்துவராக ஆசைப்படும் ஜூலியட், தனது தந்தையின் உதவியோடு அந்த பணத்தை 
நிர்வகித்து வருகிறார்.





இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக