நாட்டில் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளின் வட்டிக்கு வற் வரி அறவிடப்படவுள்ளது

வெள்ளி, 22 டிசம்பர், 2023

நாட்டில் வங்கியில் பணம்சேமிப்பில் வைத்திருப்பவர்கள் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்துதல் வேண்டும்.  இலங்கையில் உள்ள வங்கிகளில் நிலையான வைப்பு அல்லது சாதாரண சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு மாதாந்தம் வட்டி வழங்கப்படுவது வழமை. 
இந்த வட்டிக்கும் பொருட்கள் சேவைகள் (VAT TAX) வரி 18 வீதம் விதிக்கப்பட உள்ளது. உதாரணமாக மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வட்டி கிடைத்தால் 1800ரூபாவை (VAT TAX ) வற் வரியாக அரசாங்கத்திற்கு
 செலுத்த வேண்டும். 
பெரும்பாலான ஓய்வூதியக்காரர்கள் வங்கிகளில் நிலையான வைப்பை செய்து அதில் வரும் வட்டி வருமானத்திலேயே வாழ்க்கை நடத்துகிறார்கள். வெளிநாட்டில் இருந்த ஒருவர் தனது ஓய்வு காலப்பணம் ஒரு
 கோடி ரூபாவை இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் நிலையான வைப்பிலிட்டு ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபாவை மாதம்
 வட்டிப்பணத்தை எடுத்து இலங்கையில் வசித்து வருகிறார் என்றால் அவர் இனிமேல் மாதம் 27ஆயிரம் ரூபாவை வற் வரியாக இலங்கை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக