நாட்டில் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

சனி, 9 டிசம்பர், 2023

நாட்டில்  பண்டிகை காலம் காரணமாக முட்டையின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.
கடந்த நாட்களில் 45 ரூபாய்க்கு உட்பட்ட விலையில் விற்பனையான வெள்ளை முட்டை தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சிவப்பு முட்டை 53 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்தநிலையில், வெள்ளை முட்டையொன்றை 50 ரூபாய்க்கும், சிவப்பு முட்டையொன்றை 52 ரூபாய்க்கும் விற்பனை 
செய்யுமாறு முட்டை விற்பனையாளர்களுக்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று முன்தினம் 
கோரியிருந்தது.
நத்தார் மற்றும் புதுவருடப்பிறப்பு காரணமாக தற்போது, சந்தையில் முட்டைக்கு அதிக கேள்வி நிலவுகிறது. இந்தநிலையில், சந்தையில் கேக் உள்ளிட்ட முட்டை சார்ந்த உற்பத்திகளின் விலையும் 
அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், முட்டை விலை அதிகரித்த நிலையில், காணப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது.
எவ்வாறாயினும், பண்டிகை காலத்தில் முட்டையின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க முன்னதாக தெரிவித்திருந்தமை
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக