மலேசியாவை சேர்ந்த மூதாட்டி மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள விரும்பும்

புதன், 13 டிசம்பர், 2023


மலேசியாவை சேர்ந்த 112 வயதுப் பாட்டி ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்வதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்
ஏற்கனவே 7 மூறை திருமணம் செய்திருக்கும் சித்தி ஹவ்வா ஹுஸினுக்கு 4 பிள்ளைகள், 19 பேரப் பிள்ளைகள், 30 கொள்ளுப் பேரப்பிள்ளைகள். இப்போதும் வரன் வந்தால் நிராகரிக்கப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர், தமது கணவர்களில் சிலர் காலமாகிவிட்டதாகும் சிலரை விவாகரத்துச் செய்ததாகவும் கூறினார். சித்தி ஹவ்வா தமது ஆக இளைய மகனுடன் வசிப்பதாக தெரிவித்துள்ளார்.

 உடல்நலத்தைப் பார்த்துக்கொள்வதும் சோற்றில் குழம்பைச் சேர்த்துக் கொள்ளாததும் தான் தனது நீண்ட ஆரோக்கியமான வாழ்வின் ரகசியம் என குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை உணவைக்கூட சித்தி ஹவ்வா தவறவிடுவதில்லை. தினமும் 5 வேளை தொழுகிறார். சுறுசுறுப்பாகவும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக