நாட்டில் பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் நேற்று இரவு 10.00 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மட்டக்களப்பு -
பொலன்னறுவை
பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு செல்லும் பயணிகளின் வசதிக்காக கதுருவெல ரயில் நிலையத்தில் இருந்து மன்னம்பிட்டி நோக்கி விசேட ரயில் சேவை காலை 10.30 மணி முதல் இடம்பெறும் என கதுருவெல ரயில் நிலைய
அதிபர் தெரிவித்தார்.
மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக கிரிதலே, எலஹெர, பகமூனை, தெஹிஅத்த கண்டிய வீதி ஊடாக பயணிக்க முடியும் என அறிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக