யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்படும், ‘யாழ் சர்வதேச சதுரங்க போட்டி 2023‘ இன்று காலை
ஆரம்பமானது.
குறித்த போட்டியானது எதிர்வரும் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலாஸில் நடைபெறும் போட்டியின் ஆரம்ப நிகழ்வில்,
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறிசற்குணராஜா, இந்திய துணைத்தூதராக அதிகாரி ஸ்ரீ ராம் மகேஷ், இலங்கை
சதுரங்க கழகத்தின் தலைவர் லக்ஸ்மன் விஜேசூரிய, ஞானம் பவுண்டேசனின் உப தலைவர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள குறித்த போட்டியில் 150 இற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக