அவசரமாக தரையிறக்கம் கொழும்பில் இருந்து மாலைதீவு சென்ற விமானம்

வியாழன், 21 டிசம்பர், 2023

மாலைதீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  20.12.2023.அன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான 
நிலையத்திற்கு 
திரும்பியுள்ளது.காலை 7:30 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட UL 101 என்ற விமானம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்து
 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் விமான
 நிலையத்தில்
 பாதுகாப்பாக தரையிறங்கியது.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தீபால் பெரேரா, இந்தச் சம்பவத்தை உறுதி செய்ததுடன், 
தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம்
 எனத் தெரிவித்தார்.
பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாற்று விமானங்களை 
ஏற்பாடு செய்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக